சபை நாகரிகத்தை கடைபிடித்த ஐஸ்வர்யா... நடிகர் தனுஷூக்கு கொடுத்த பதிலடி - கடுப்பான ரசிகர்கள்

Rajinikanth dhanush mohanlal AishwaryaaRDhanush aishwaryarajinikanth
By Petchi Avudaiappan Mar 17, 2022 05:52 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

இயக்குநர் ஐஸ்வர்யாவின்  ஆல்பம் பாடலுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் ஐஸ்வர்யா திரும்ப பதில் அளித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர். 

இதனிடையே  ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முசாஃபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இந்த பாடல் இன்று மாலை வெளியானது. இந்த இசை ஆல்பத்திற்கு தமிழில் பயணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார்.  இதனை முன்னிட்டு  யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

அவர் தனது பதிவில், பயணி மியூசிக் வீடியோவிற்காக என் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.  இதற்கு பதிலளித்துள்ள ஐஸ்வர்யா ‘தேங்க்ஸ் தனுஷ்....தெய்வீகம் உண்டாகட்டும்’ என தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இப்படி பாராட்டிக் கொள்வது நல்ல உறவுக்கு அடிப்படையாக அமையும் என தெரிவித்துள்ளனர்.