இவரை மட்டும் கூடவே வெச்சிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - யார் தெரியுமா?
தான் எங்கு சென்றாலும் தன்னுடன் கேமராவை உடன் எடுத்துச் சென்று வருகிறாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
காதல் திருமணம் - பிரிவு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் ரஜனிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தனர்.
18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் திடீரென பிரிவதாக அறிவித்தது அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கேமராவுடன் செல்லும் ஐஸ்வர்யா?
பின்னர் இருவரும் விவாகரத்து அறிவிப்புக்கு பின் தங்கள் திரைப்பட வேலைகளில் பிசியாகினர். ஐஸ்வர்யா பயணி என்ற ஆல்பம் சாங் தயாரிப்பில் படு பிசியாக இருந்து வந்தார்.
மேலும் நடிகர் ராகவாலாரன்ஸை வைத்து திரைப்படம் ஒன்றை எடுக்க உள்ளார். நடிகர் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
அண்மையில் இருவரும் போயஸ்கார்டன் வீட்டில் சந்தித்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.
ஐஸ்வர்யா தனது ஜிம் வொர்க்கவுட், மற்றும் சைக்கிளிங் போவது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அவர் எங்கு சென்றாலும் தனது கேமராவை எடுத்துச் சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.