என் மகன்களைப் பார்த்து சிரித்து பிரகாசிக்கிறேன்... - ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம் வைரல்...!

Twitter Aishwarya Rajinikanth
By Nandhini Feb 25, 2023 11:36 AM GMT
Report

என் மகன்களைப் பார்த்து சிரித்து பிரகாசிக்கிறேன் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்து

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து வந்தார். இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வந்தனர்.

aishwarya-rajinikanth-twitter

ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படம்

இதனையடுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் படங்களை இயக்க வந்துவிட்டார். இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘லால் சலாம்’ படத்தை ஐஸ்வர்யா இயக்க உள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

என் மகன்களைப் பார்த்து சிரித்து பிரகாசிக்கிறேன்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், எந்த சூரியனும்.. இந்த குழந்தைகளின் விளையாட்டு விளையாட்டின் உற்சாகத்தை நிறுத்த முடியாது. அவர்கள் காலை சூரிய ஒளி.. ஓடி ஒளிந்தனர். நான் அங்கே நின்று கொண்டிருந்தபோது, ​​என் மகன்களைப் பார்த்து சிரித்து பிரகாசிக்கிறேன்.. என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.