தந்தையின் புகைப்படம் வெளியிட்டு விஜயதசமி வாழ்த்து கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படம்
தந்தை நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விஜயதசமி வாழ்த்து கூறியுள்ளார்.
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து வந்தார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வந்தனர். ரசிகர்கள் இருவரையும் ஒன்றாக சேர்ந்து விடுங்கள் என்று சமூகவலைத்தளங்களில் பல மாதங்களாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
விழாவில் ஒன்றாக கலந்து கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா
சமீபத்தில், தனுஷ், ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா அவரது பள்ளியில் விளையாட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விழாவில், மகன் யாத்ரவுக்காக தனுஷ், ஐஸ்வர்யா ஒன்றாக கலந்து கொண்டனர்.
அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா, பாடகர் விஜய் ஏசுதாசின் குடும்பத்தினர் இடம் பெற்றனர். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைப் பார்த்த ரசிகர்கள் தனுஷ், ஐஸ்வர்யா ஒன்றாக இணைந்து விட்டார்களா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
விஜயதசமி வாழ்த்து
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில், தந்தை ரஜினிகாந்தின் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், பொய் எதுவும் இல்லை, குறைபாடற்றது.. ஒருபோதும் தவறு செய்ய முடியாத ஒரு சட்டகம்.. ஒருபோதும் தவறான கோணத்தில் இருக்க முடியாத முகம். தந்தை அன்பு... நேர்மறை விலைமதிப்பற்ற படம்.. உங்கள் எல்லா நாட்களும் மேற்கண்ட வரியில் கூறப்பட்டுள்ளபடியே இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
#nofilter needed,nothing false,flawless
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) October 5, 2022
A frame that can never go wrong..
A face that can never have a wrong angle. #fatherlove❤️
Positive priceless picture perfect
Hope all your days are as the above line states
Wishing everyone a happy #vijayadhasami
Shot on #iphone14promax pic.twitter.com/e6est0MDH4