மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த மாதம் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைத்தளம் பக்கம் மூலம் அறிவித்தனர்.
இவர்கள் இருவரது பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளிவரும் நிலையில் திரையுலகினர் மட்டுமின்றி ரஜினி, தனுஷ் ரசிகர்களும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு தனுஷ் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதேசமயம் 2 படங்களை இயக்கி்யுள்ள ஐஸ்வர்யாவும் மீண்டும் படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முறையான பாதுகாப்பு முறைகளை கையாண்டும் தமக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
You May Like This