காதலர் தினத்தில் ஐஸ்வர்யா வெளியிட்ட புதிய அறிவிப்பு - அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்

Rajinikanth anirudh dhanush ranjith sagar aishwaryarajinikanth valentineday prerna
By Petchi Avudaiappan Feb 14, 2022 06:15 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலர் தினத்தில் தனது அடுத்தக்கட்ட அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர்.

இந்த சம்பவம் ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தனது அடுத்தக்கட்ட திரையுலக பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிய நிலையில் இயக்குநர் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் காதல் பாடல் ஒன்று தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் காதலர் தினமான இன்று ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதுபாடல் ஒன்றினை குறித்த புரோமோ வீடியோவை ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். இதன்மூலம் பாடலின் இசையமைப்பாளர் அன்கித் திவாரி என்பதும், இந்த பாடலை தெலுங்கில் சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த்தும், தமிழில் அனிருத்தும் பாடுகின்றனர். 

மேலும் Pan India' வகையில் இந்த பாடல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

You May Like This