"அவர் ரொம்ப நல்லவர்" - ரூட்டை மாற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட டிவிட்டர் பதிவு தனுஷ் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியில் முசாஃபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இந்த பாடல் தமிழில் பயணி என்ற பெயரில் மார்ச் 19 ஆம் தேதி வெளியானது. இதனை முன்னிட்டு யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
அவர் தனது பதிவில், பயணி மியூசிக் வீடியோவிற்காக என் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஐஸ்வர்யா நன்றி தெரிவித்திருந்தார். இதனிடையே இந்தியில் ஒரிஜினல் முசாஃபிர் பாடல் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
1.9 million in 9 hours.. overwhelmed by the response for my Hindi directorial single #musafir..thank you @PprernaArora for believing in me n @kumartaurani for the support n @shivin7 this is just your beginning!hope you all like it ! #thankful #grateful pic.twitter.com/bRvIcZUSUs
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) March 22, 2022
வீடியோவை பார்த்த அனைவருமே ஹீரோ ஷிவினின் நடிப்பை தான் பாராட்டி தள்ளியுள்ளனர். இந்நிலையில் உங்களுக்கு இது வெறும் ஆரம்பம் தான் ஷிவின் என ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் ஷிவின் நேர்மையானவர், பொறுமையானவர். அவருடன் சேர்ந்து வேலை செய்ததில் மகிழ்ச்சி என கூறி இருந்தார். இதனைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் என்ன அண்ணி இதெல்லான் நியாயமா?.. சீக்கிரம் அண்ணனுடனான பிரச்சனையை சரிசெய்ய முயற்சி பண்ணுங்க என கருத்து தெரிவித்துள்ளனர்.