தனுஷை இன்னும் மறக்காமல் இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - ஆதாரத்துடன் வெளியான உண்மை
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டாலும் சில நினைவுகள் இருவரையும் ஒன்று சேர்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த மாதம் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைத்தளம் பக்கம் மூலம் அறிவித்தனர்.
இவர்கள் இருவரது பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளிவரும் நிலையில் திரையுலகினர் மட்டுமின்றி ரஜினி, தனுஷ் ரசிகர்களும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர்.
இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக நேற்றைய தினம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அதைப் பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விவாகரத்து அறிவிப்புக்குப் பின் எந்த பதிவையும் வெளியிடாத நிலையில் ஐஸ்வர்யாவின் இந்த பதிவு அதிக கவனம் பெற்றுள்ளது. அதற்கு காரணம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷின் பெயரை ஐஸ்வர்யா நீக்காமல் இருந்து வருகிறார். இதன்மூலம் தனுஷ் நினைவுகளில் இன்னும் மீளாமல் ஐஸ்வர்யா இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.