ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் இருப்பது யார்? - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஒற்றை புகைப்படம்
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். கிட்டதட்ட 18 ஆண்டுகால மணவாழ்க்கைக்குப் பின் இந்த தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து பெறவுள்ளதாக அறிவித்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இரு குடும்ப உறுப்பினர்கள், ரசிகர்கள் இருவரும் சேரும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியில் முசாஃபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கினார். தொடர்ந்து பட வேலைகளில் இருப்பது, ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது போன்ற் புகைப்படங்கள் வைரலாகின.
இந்நிலையில் நேற்று திடீரென இசைஞானி இளையராஜாவை சந்தித்து அவர் ஸ்டூடியோவில் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்திருந்தார். அதோடு எனது திங்கட்கிழமை பகல் பொழுது இளையராஜா அங்கிளின் இசையும், மந்திர சக்தியும் இல்லாமல் இருந்தால் இனிமையாகி இருக்காது என கேப்ஷன் போட்டிருந்தார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் இது போன்ற பல நல்ல விஷயங்களை கடவுள் தொடர்ந்து உங்களுக்கு கொடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.