மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நலமுடன் திரும்பினார் - குடும்பத்தினர் நிம்மதி
கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா நலமுடன் ஐதராபாத்தில் உள்ள அறைக்கு திரும்பினார் .
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி காதல் ஆல்பம் ஒன்றை டைரக்ட் செய்து வருகிறார்.
காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி ஆல்பத்தை வெளியிட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் ஐஸ்வர்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் அவரின் காதல் ஆல்ப படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.இதனால் 14ம் தேதி ஆல்பம் வெளியாவது சந்தேகமானது.
இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யா பூரண குணமடைந்து ஐதராபாத்தில் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு திரும்பினார்.
காதல் ஆல்பம் படப்பிடிப்பில் விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளாராம் மேலும் காதல் தினமான பிப்ரவரி 14-ம் தேதி காதல் ஆல்பம் வெளியாவது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா சிகிச்சை முடித்து வீடு திரும்பிய நிலையில் அவரின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
You May Like This