கொரோனாவில் இருந்து மீண்டு வேலையில் ஈடுபட தொடங்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் தனுஷும் காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் 18 வருட திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக கடந்த ஜனவரி 17-ந் தேதி சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து சில தினங்களிலேயே இருவரும் அவரவர் துறை சார்ந்த வேலையில் ஈடுபட தொடங்கினர்.
அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஐதராபாத்தில் ஒரு ஓட்டலில் தங்கி காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஆல்பம் ஒன்றை டைரக்ட் செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அவர் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது அவர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து ஐதராபாத்தில் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
நாளை மீண்டும் பணிக்கு திரும்பும் அவர் காதல் ஆல்பம் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார். இதன் மூலம் 14-ந் தேதி ஐஸ்வர்யா இயக்கும் காதல் ஆல்பம் வெளியாவது உறுதியாகி உள்ளது.