தனுஷை மறக்க புதிய முயற்சியை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினி
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மனமாற்ற்த்திற்காக புதிய முயற்சி ஒன்றை கையிலெடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியில் முசாஃபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இந்த பாடல் தமிழில் பயணி என்ற பெயரில் மார்ச் 19 ஆம் தேதி வெளியானது.
இதனைத் தொடர்ந்து இந்தியில் படம் இயக்கவுள்ளதாக அறிவித்து ஐஸ்வர்யா அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது தான் வொர்க் அவுட் செய்யும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நம்முடைய உண்மையான சக்தியை யாரும் அறிய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரின் புதிய மன மாற்றத்திற்கான முட்வை கண்டு தனுஷ் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் மனைவி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அரசு IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil