சீனாவில் மாஸ் காட்டும் தமிழ் பாட்டு - நீங்களும் கேட்டுப் பாருங்க...!

தர்மதுரை படத்தில் இடம் பெற்ற ஆண்டிப்பட்டி கனவா காத்து பாடலை சீனாவில் நடைபெற்ற திருமண விழாவில் சீனர் ஒரு பாடி அசத்தி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தர்மதுரை திரைப்படத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் உட்பட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்த இப்படமும், பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம் பெற்ற ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே என்ற பாடலை சீனாவில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சீனர் ஒருவர் அழகாக பாடி அனைவரின் கைதட்டலையும் பெற்றுள்ளார்.

அந்த சீனர் பாடலை பாட பாட அங்கிருந்தவர்கள் குஷியில் ஆட்டம் போட்டனர். இந்த வீடியோவை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தமிழில் பாட்டுப்பாடி அசத்திய அந்த சீனரை பாராட்டி வருகின்றனர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்