நா அத பண்ணேன் தான் - அதெல்லாம் வெளிய சொல்லணுமா என்ன..? ஓப்பனாக கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Aishwarya Rajesh Tamil Cinema
By Karthick Jan 04, 2024 04:06 PM GMT
Report

சென்னையில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ், மலையாளம் என தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அண்மையில் சென்னை தாம்பரம் செம்பாக்கத்தில் நடைபெற்ற நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார்.

aishwarya-rajesh-answers-about-helping-others

அந்நிகழ்ச்சியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகை, நடிகர்கள் உதவி செய்தது குறித்து வினவப்பட்டது.

அவசியமில்லை

அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், செய்த உதவிகளை வெளிய சொல்லணும்னு தேவையில்லையே என்ற அவர், உதவி செய்வதை ஊக்கவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, நீங்க என்ன உதவி செய்தீர்கள் என கேட்க வேண்டாம் என பதிலளித்தார்.

aishwarya-rajesh-answers-about-helping-others

தொடர்ந்து பேசிய அவர், விஜயகாந்த் மரணம் மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கூறி, அந்த நேரத்தில் நான் பாண்டிச்சேரியில் இருந்தேன் என்றும் அதனால் வர முடியவில்லை என கூறினார். மேலும், நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்தின் பெயர் வைப்பது சரி என்றால் வைக்கலாம் என்று கூறினார் ஐஸ்வர்யா ராஜேஷ். உதவி செய்ததை வெளியே சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அது அவர்களது விருப்பம்.