12 வயதில் நேர்ந்த கொடுமை - ஐஸ்வர்யா ராய் மகள் நீதிமன்றத்தில் வழக்கு!
நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவதூறு
நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் இருவருக்கும் 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராத்யா பச்சன்(12) என்ற மகள் ஒருவர் உள்ளார். பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா விழாக்களுக்கு பெற்றோருடன் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அவருடைய ஹேர் ஸ்டைல், அவர் ஐஸ்வர்யா ராயின் கைகளைப் பிடித்துக்கொண்டு எப்படி நடக்கிறார் என விமர்சனங்கள் எழுந்து வந்தது. மேலும், மகள் உடல்நலம் சரியில்லாதவர் என்று சில யூடியூப் சேனல்களில் ஒளிப்பரப்ப பட்டது.
மகள் வழக்கு
இந்நிலையில், ஆராத்யா பச்சன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், "தவறான உள்நோக்கத்துடன் வதந்தியை பரப்புகிறார்கள். அந்த வீடியோவை நீக்க வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். பச்சன் குடும்பத்தின் நற்பெயரை கலங்கடிக்கும் விதமாக இதுபோன்று வதந்தியை பரப்புகிறார்கள்.
அவர்கள் பச்சன் குடும்பத்திடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலிக்கும் நோக்கில் இதை செய்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், "ஆராத்யா பச்சன், மைனர் என்பதால் அவரைப் பற்றி ஊடகங்களில் பொய்யான செய்திகளை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும்" தெரிவித்துள்ளார்.