நடிகை ஐஷ்வர்யா ராய்யிற்கு அமலாக்கத்துறை அதிரடி சம்மன் - இதுதான் காரணமா?

aishwarya rai bachchan panama paper leak case
By Swetha Subash Dec 20, 2021 07:18 AM GMT
Report

ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட 500 இந்தியர்களின் பெயர்கள் பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.

பனாமா ஆவண விவகாரம் தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியல் பனாமா ஆவணம் என்ற பெயரில் வெளியானது.

இதில் பல நாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இதில் நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட 500 இந்தியர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் பகுதி 37-ன் கீழ், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜாராக வேண்டும் என அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளதாகவும்,

இது தொடர்பாக அவர் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.