பனாமா பேப்பர்ஸ் வழக்கு : நடிகை ஐஸ்வர்யா ராயிடம் 5 மணி நேரமாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை
பனாமா பேப்பர்ஸ் வழக்கு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறையினர் 5 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.
உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர், தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் இந்நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியாகி உள்ளன. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவித்தது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரும் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட நபர்களிடம் அமலாக்கத்துறை சார்பில் விளக்க அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதனையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஐஸ்வர்யா ராய் நேற்று நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 5 மணி நேரமாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.