உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் - வைரல் புகைப்படம்
உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா தற்போது பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. உலகெங்கிலிருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவில், இந்த ஆண்டு இந்திய திரையுலகைச் சேர்ந்த ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக இதில் ஏ.ஆர்.ரகுமானின் ‘லே மஸ்க்’ படம், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தின் டிரைலர், மாதவன் இயக்கி உள்ள ‘ராக்கெட்ரி’ படம், பா.இரஞ்சித்தின் ‘வெட்டுவம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இவ்விழாவில் வெளியிடப்பட உள்ளது.
இவ்விழாவில், வைரத் தொங்கல்களை அணிந்து, ஸ்ட்ராப்லெஸ் இறகு கவுனில் கனவு கன்னியாக தோன்றினார் பூஜா ஹெக்டே. இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வருகின்றனர்.
மேலும், கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
தற்போது, இணையத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பட்சன் மற்றும் ஆராத்யாவுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம் -
पुत्र, बहु, पोती ❤️ https://t.co/8lyRqORUCE
— Amitabh Bachchan (@SrBachchan) May 19, 2022
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan