இளையராஜாவுடன் கை கோர்க்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - ரசிகர்கள் உற்சாகம்..!
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இசைஞானி இளையராஜாவை சந்தித்து பேசினார்.
இவர்களின் சந்திப்பு குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஐஸ்வர்யா.
இவர்களின் சந்திப்பு குறித்து முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஓ சாத்தி சல் படம் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா.
தான் பாலிவுட் செல்லும் அந்த படத்திற்கு இசையமைக்குமாறு இளையராஜாவை கேட்கத் தான் அவரை சந்தித்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாலிவுட் படத்திற்கு இளையராஜா இசையமைப்பது இது ஒன்றும் முதல் முறை இல்லை. தன் பாலிவுட் பயணத்தை இசைஞானியுடன் சேர்ந்து துவங்க ஐஸ்வர்யா ஆசைப்படுவதாக கூறப்படுகிறது.
வேலை காரணமாக இளையராஜாவை சந்தித்தபோது தான் அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
ஓ சாத்தி சல் தவிர்த்து மேலும் ஒரு இந்தி படத்தையும் இயக்கவிருக்கிறார். அந்த படத்தை பிரேர்னா அரோரா தயாரிக்கிறார்.
ஐஸ்வர்யா இயக்கிய பயணி காதல் பாடல் வீடியோவை தயாரித்தவர் தான் இந்த பிரேர்னா அரோரா என்பது குறிப்பிடத்தக்கது.