ராகவா லாரன்ஸுக்கு அடித்த ஜாக்பாட் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்த மூவ்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முசாபிர் என்ற ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கியுள்ளார்.
அவர் இயக்கியுள்ள இந்த பாடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் தனுஷுக்கும்,ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர்.
அவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக மாறினர்.
இந்நிலையில் ஹைதராபாத்திற்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முசாபிர் ஆல்பம் பாடல் தயாரிப்பில் இறங்கினார்.

இந்நிலையில் அவரின் ஆல்பம் பாடல் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் அந்த பாடல் குறித்தான அப்டேட்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ்,ஐஸ்வர்யாவை சந்தித்த புகைப்படம் அண்மையில் வெளியானது. இந்த சந்திப்பு குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
"என் தங்கச்சியை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். நாங்க சந்தித்த காரணத்தை தங்கச்சி அதிகாரப்பூர்வமாக சீக்கிரமே அறிவிப்பாங்க.
இதனால் ஐஸ்வர்யா விரைவில் லாரன்ஸை வைத்து ஒரு படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்புவை வைத்து படம் இயக்க உள்ளார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸை வைத்து படம் எடுக்க உள்ளதாக வெளியான தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan