ஐஸ்வர்யாவை சந்தித்த பிரபல நடிகர் - வைரலாகும் போட்டோ..!
ஐஸ்வர்யா தயாரித்துள்ள முசாபிர் என்ற ஆல்பம் பாடல் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது விரைவில் வெளியாக உள்ளது.
4 மொழிகளில் பாடலை வெளியிட உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.அவரின் பாடலுக்கு திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷுக்கும்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு யாத்ரா,லிங்கா,என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் நடிகர் தனுஷ்,ஐஸ்வர்யா இருவரும் தங்கள் வாழக்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.
அவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்கள்,குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக மாறினர்.
ஐஸ்வர்யா முசாபிர் என்ற ஆல்பம் பாடல் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார்.இதற்காக ஹைதராபாத்தில் தங்கி படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து குணமடைந்து வீடு திரும்பிய ஐஸ்வர்யா படப்பிடிப்பு வேலைகளை கவனித்தார்.
இதனிடையே மீண்டும் காய்ச்சல் மற்றும் தலைசுற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் முசாபிர் பாடல் திட்டமிட்டப்படி வெளியாகமல் போனது.
இதையடுத்து டீசர் மட்டும் வெளியானது. முசாபிர் பாடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Something interesting is brewing…my brain is racing after meeting up with my dear @offl_Lawrence Anna ! #workmode on ..wherever whenever whatever! pic.twitter.com/iv1DOryuMe
— Aishwaryaa.R.Dhanush (@ash_r_dhanush) March 13, 2022
ஐஸ்வர்யாவை நேரில் சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ்.அன்பான அண்ணனை சந்தித்த பிறகு மூளை இன்னும் வேகமாக செயல்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.