ஐஸ்வர்யாவுடன் டீல் போட்ட நடிகர் தனுஷ் - ரசிகர்கள் மகிழ்ச்சி..!

Dhanush Divorce Aishwarya ரஜினிகாந்த் ஐஸ்வர்யா NewDeal நடிகர்தனுஷ்
By Thahir Mar 22, 2022 12:00 AM GMT
Report

ஐஸ்வர்யாவுடன் நடிகர் தனுஸ் டீல் செய்து கொண்ட சம்பவத்தால் இருவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஐஸ்வர்யாவுடன் டீல் போட்ட நடிகர் தனுஷ் - ரசிகர்கள் மகிழ்ச்சி..! | Aishwarya R Dhanush Dealing New Information

18 ஆண்டுகளாக மகிழச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு அவர்களது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை.

இதையடுத்து இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர். இதனிடையே ஐஸ்வர்யா நடிகர் தனுஷிடம் டீல் ஒன்றை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் நான் பிசியாக இருக்கும் போது நம் குழந்தைகள் யாத்ரா,லிங்காவை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள், நீங்கள் பிசியாக இருக்கும் போது நான் பார்த்து கொள்வதாகவும் டீல் செய்துள்ளார்.