நடிகர் தனுஷுக்கு கண்டிசன் போட்ட ஐஸ்வர்யா - கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
1 மாதம் முன்

மகன்களின் புகைப்படங்களை சமூகவளைதலத்தில் பதிவிட கூடாது என நடிகர் தனுஷுக்கு,ஐஸ்வர்யா உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். பல திரைப்படங்களை வெற்றி படங்களாக கொடுத்தவர் இவர்.

நடிகர் தனுஷுக்கு கண்டிசன் போட்ட ஐஸ்வர்யா - கொந்தளிக்கும் ரசிகர்கள்..! | Aishwarya Puts Condition On Dhanush

கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷை காதலித்து திருணம் செய்து கொண்டார் 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக சமூகவளைத்தலங்களில் அறிவித்தனர்.

அதை தொடர்ந்து நடிகர் தனுஷை பல்வேறு பிரச்சனை விடாமல் துரத்தி வருகிறது. விவாகரத்து அறிவிப்புக்கு பின் வெளியான மாறன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில் வெற்றி படத்தை எப்படியாவது கொடுத்திட வேண்டும் என்று முனைப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே தனது மன உளைச்சலை போக்கி கொள்ளும் வகையில் தனது மகன்களுடன் நேரத்தை செலவிடுவதால் மகிழ்சியுடன் இருந்து வருகிறார். அவர் இளையராஜா இசை நிகழ்ச்சியில் தனது மகன்களுடன் பங்கேற்றார் அந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலானது.

நடிகர் தனுஷுக்கு கண்டிசன் போட்ட ஐஸ்வர்யா - கொந்தளிக்கும் ரசிகர்கள்..! | Aishwarya Puts Condition On Dhanush

இந்த புகைப்படங்களால் அப்பாவின் மீது தான் அதிக பாசம் இருப்பதாக கூறியிருந்தனர். இந்த புகைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் மகளை அழைத்து பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடும் படி கண்டித்துள்ளார்.

இதையெல்லாம் பார்த்த ஐஸ்வர்யா பிள்ளைகளை கணவருடன் அனுப்ப மறுத்து விட்டாராம். இதனால் அதிர்ந்து போன விவாகரத்து நடிகர் பலமுறை கேட்ட பிறகே சில கண்டிஷன்கள் போட்டு பிள்ளைகளை அவர் அனுப்பி வைத்தாராம்.

தனுஷ் பிள்ளைகளுடன் இருக்கும்போது எடுக்கும் போட்டோவை சோஷியல் மீடியாவில் வெளியிடக்கூடாது என்று கறாராக சொல்லிவிட்டாராம்.

இதனால் நொந்து போன நடிகர் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசத்தால் வேறு வழியில்லாமல் சரி என்று சம்மதித்துள்ளாராம். இப்படி ஒரு பரிதாப நிலையில் இருக்கும் அவரைப் பற்றிதான் தற்போது திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.