நீங்கள் எதிர்பாரத்தது நடக்க போகுது - நல்ல செய்தி சொன்ன ஐஸ்வர்யா
கடந்த ஜனவரி மாதம் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கூட்டாக சமூக வளைதலங்களில் அறிவித்தனர்.
அவர்களின் அறிவிப்பு குடும்பத்தினர்,ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்கபடுத்தியது. இதையடுத்து இருவரும் தங்களது விவாகரத்திற்கு பிறகு அவர்களது வேலைகளில் பிசியாக மாறினர்.
ஐஸ்வர்யா தனது மியூசிக் ஆல்பம் வேளைகளில் ஆர்வமாக இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது ஐஸ்வர்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் அவர் பூரண குணமடைந்து மீண்டும் தனது ஆல்பம் பாடல் தயாரிப்பில் மும்முரமாக இறங்கினார்.
கடந்த காதலர் தினத்தன்று தனது ஆல்பம் பாடலின் புரோமோ வெளியிட்டிருந்தார். அன்கித் திவாரி இசையமைத்துள்ள 'முசாபிர்' என்ற பாடல் பல மொழிகளில் தயாராகியுள்ளது.
இந்த பாடலை தெலுங்கில் சாகரும்,மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும்,தமிழில் அனிருத்தும் பாடுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக 'முசாபிர்' பாடலின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஐஸ்வர்யா.
தினமும் “முசாபிர்” பாடல் குறித்தான அப்டேட்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் முசாபிர் பாடல் வேளைகள் அனைத்தும் நிறைவு பெற்றதாகவும்,
விரைவில் பாடல் வெளியாக உள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன.