தனுஷின் அன்புக்கு ஏங்கும் மகன்கள் - கட்டிப்பிடித்தபடி ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்

Dhanush Tamil Cinema Aishwarya Rajinikanth
By Thahir 4 மாதங்கள் முன்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வளைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

காதல் திருமணம் - பிரிவு 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தனுஷின் அன்புக்கு ஏங்கும் மகன்கள் - கட்டிப்பிடித்தபடி ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம் | Aishwarya Posted A Hug Sons

17 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்களுக்கு லிங்கா, யாத்ரா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தங்களது சமூக வளைதல பக்கங்களில் அறிவித்தனர்.

அவர்களின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் நடிகர் தனுஷுடன் இணைவார் என்று செய்திகள் வெளியாகி வந்தன.

ஏங்கும் மகன்கள் 

பின்னர் இருவரும் ஒரே வீட்டில் சந்தித்துக்கொண்டதாக தகவல்கள் வெளியானது. நடிகர் தனுஷ் விழா ஒன்றில் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படம் வெளியானது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் தனது மகன்களை கட்டி அணைத்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த பதில் சில நேரங்களில் நமக்கு தேவை அவர்களின் ஹக் தான் என தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்களது கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.