இளையராஜாவை ஐஸ்வர்யா ஏன் சந்தித்தார் தெரியுமா? - எல்லாத்துக்கும் தனுஷ் தான் காரணம்...!

ilayaraja aishwaryarajinikanth aishwaryardhanush
By Petchi Avudaiappan Apr 13, 2022 11:56 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in திரைப்படம்
Report

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்த நிகழ்வுக்கான காரணம்  குறித்த  தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். கிட்டதட்ட 18 ஆண்டுகால மணவாழ்க்கைக்குப் பின் இந்த தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து பெறவுள்ளதாக அறிவித்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இரு குடும்ப உறுப்பினர்கள், ரசிகர்கள் இருவரும் சேரும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியில் முசாஃபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கினார். தொடர்ந்து பட வேலைகளில் இருப்பது, ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது போன்ற் புகைப்படங்கள் வைரலாகின.

இதனைத் தொடர்ந்து அவர் நேரடி இந்திப்படம் ஒன்றை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு  இசைஞானி இளையராஜாவை சந்தித்து அவர் ஸ்டூடியோவில் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்திருந்தார்.  இதற்கு காரணம் இந்தியில் இயக்கும் படத்துக்கு அவரை இசையமைக்க வைக்கலாம் என ஐஸ்வர்யா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதேசமயம் தனுஷூடனான விவாகரத்து பிரச்சனையில் கடந்த சில நாட்களாக மனக்குழப்பம் மற்றும் வேதனையில் உள்ள ஐஸ்வர்யா இளையராஜாவிடம் பேசினால் மனதுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என்று நினைத்து அவரை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எப்போதெல்லால் ரஜினி ஒரு சிக்கலில் இருந்து வெளியே வரும்போது  இளையராஜாவை சந்தித்து உரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.