தனுஷ் விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் - ஐஸ்வர்யா செய்த எதிர்பாராத சம்பவம்
தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து சம்பவத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
#maaran is now yours !! Om namashivaaya ?? https://t.co/IgZ9D4kT7Z
— Dhanush (@dhanushkraja) March 11, 2022
விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களுடைய பட வேலைகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் மாறன் படம் வெளியான நிலையில் , ஐஸ்வர்யா இயக்கத்தில் 'முசாபிர்' எனும் மியூசிக் ஆல்பம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இதனிடையே மாறன் படம் தொடர்பாக தனுஷ் பகிர்ந்த ட்வீட்டை ஐஸ்வர்யா லைக் செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த நிகழ்வை பாசிட்டிவ் ஆக பார்க்கின்றனர்.