செல்வராகவனை பார்த்து ஐஸ்வர்யா இப்படி ஒரு வார்த்தை சொல்லலாமா? - அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்
இயக்குநர் செல்வராகவன் போட்டோவுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்ட கருத்து தனுஷ் ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தனுஷூடன் மட்டுமே பேசாமல் இருந்து வரும் நிலையில் ஐஸ்வர்யா அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்ந்து நல்ல உறவுமுறையில் தான் இருந்து வருகிறார். அந்த வகையில் தனுஷின் அண்ணனும், இயக்குநருமான செல்வராகவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்றைய தினம் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.
அதற்கு கருத்து தெரிவித்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “வாவ்...செல்வா அத்தான்” என கூற அதனைக் கண்ட தனுஷ் ரசிகர்கள் என்னடா நடக்குது இங்க என்ற அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan