தனுஷின் பிரிவுக்குப் பின் ஐஸ்வர்யா செய்த வெளிப்படையான சம்பவம் - கடுப்பான ரசிகர்கள்
நடிகர் தனுஷூடனான பிரிவுக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரை மாற்றியுள்ளார்.
நடிகர் தனுஷ் தனது மனைவியும் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யாவை கடந்த மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதேசமயம் விவாகரத்து அறிவிப்பு பின் இருவரும் அவர்களது திரையுலக பயணத்தில் பிசியாக உள்ளனர். ஐஸ்வர்யா தனது குழுவினருடன் இணைந்து காதல் பாடல் ஒன்றை இயக்கி வருகிறார். காதலர் தினமான நேற்று முன்தினம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பாடல் குறித்த ப்ரோமோ வீடியோவை ஐஸ்வர்யா பகிர்ந்திருந்தார்.
பல மொழிகளில் தயாராகும் இந்த பாடலை தமிழில் அனிருத் பாடுகிறார். அன்கித் திவாரி இந்த பாடலுக்கு இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யா தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பெயரை ஐஸ்வர்யா ஆர். தனுஷ் என்று தான் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.