தோழிகளிடம் அழுது புலம்பிய ஐஸ்வர்யா - காரணம் ரஜினியா? தனுஷா?
நடிகர் தனுஷை பிரிந்து வாழும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தோழிகளிடம் அழுது புலம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த மாதம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக ரஜினியே இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டதால் ஐஸ்வர்யா தனது முடிவை மாற்றி தனுஷூடன் சேர்ந்து வாழ முடிவு செய்ததாகவும், ஆனால் தனுஷ் தனக்கு கால அவகாசம் வேண்டுமென கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தனுஷ் எப்படியும் பிள்ளைகளின் நலனுக்காக நல்ல முடிவை எடுப்பார் என நம்பிக்கையுடன் ரஜினி இருக்க, ஐஸ்வர்யா தனது தோழிகளிடம் அப்பாவின் உடல் நலனை பற்றி யோசிக்காமல் அவசரப்பட்டு கணவரை பிரிந்து விட்டதாக புலம்பி கண்ணீர்விட்டு வருந்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இருவரும் விரைவில் இணைய வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.