இன்று முதல் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்ய முடியாது - ஏர்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

Airtel
By Petchi Avudaiappan Jul 28, 2021 08:59 PM GMT
Report

இன்று  முதல் இந்த பிளானில் ரீசார்ஜ் செய்ய முடியாது - ஏர்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.49 மதிப்புள்ள மாதாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை நிறுத்தியுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.49 ரீசார்ஜ் பிளானிற்கு பதிலாக ரூ.79ஐ அறிவித்துள்ளது.

ரூ.49 திட்டத்தில் 28 நாட்களுக்கு ரூ.38.52 டாக்டைம், 100 எம்பி டேட்டா ஆகியவை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ரூ.79 ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்களுக்கு ரூ.64 டாக்டைம், வினாடிக்கு 1 பைசா உள்ளூர் / எஸ்.டி.டி அழைப்பு விகிதத்தில் கட்டணம், 106 நிமிடங்கள் அவுட்கோயிங் அழைப்புகள் மற்றும் 200 எம்பி டேட்டா ஆகியவை வழங்கப்படுகிறது.

கொரோனா காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக ரூ.49 பிளான் இலவசமாகவும் மற்றும் ரூ.79 ஆனது டபுள் நன்மைகளையும் வழங்கும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.