ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

Increase Airtel Recharge Amount Customers Shocket
By Thahir Nov 22, 2021 08:03 AM GMT
Report

தற்போது முன்னணி தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான ஏர்டெல், அதன் கட்டண விகிதங்களில் மீண்டும் மாற்றம் செய்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அதிரடி கட்டண அதிகரிப்பானது நவம்பர் 26 முதல் மீண்டும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் அர்பு விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 200 - 300 ரூபாயாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் ஏர்டெல் அதன் போஸ்ட் பெய்டு திட்டங்களுக்கான கட்டண விகிதத்தினை அதிகரித்தது.

இந்த நிலையில் தற்போது ப்ரீபெய்டுக்கும் கட்டண விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இன்னும் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கட்டண அதிகரிப்பு ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டணத்தை உயர்த்துகிறது. அதன்படி, 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ. 79ல் இருந்து ரூ.99 ஆக உயர்கிறது.

ரூ.99 திட்டத்தில் (முன்பு ரூ.79) ரூ. 99 மதிப்புள்ள டாக்டைம் மற்றும் 200 எம்பி டேட்டா ஆகியவை கிடைக்கிறது அதே போல், 28 நாட்களுக்கு 2ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149ல் இருந்து ரூ.179 ஆக உயர்கிறது.

28 நாட்களுக்கு தினமும் 1ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.219ல் இருந்து ரூ.265 ஆக உயர்கிறது. 28 நாட்களுக்கு தினமும் 1.5ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.249ல் இருந்து ரூ.299 ஆக உயர்கிறது.28 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.298ல் இருந்து ரூ.359 ஆக அதிகரிக்கிறது.

56 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.399ல் இருந்து ரூ.479 ஆக அதிகரிக்கிறது. 56 நாட்களுக்கு தினமும் 2ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.449ல் இருந்து ரூ.549 ஆக அதிகரிக்கிறது.

84 நாட்களுக்கு 6 ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.379ல் இருந்து ரூ.455 ஆக அதிகரிக்கிறது. 84 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.598ல் இருந்து ரூ.719 ஆக அதிகரிக்கிறது.84 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.698ல் இருந்து ரூ.839 ஆக அதிகரிக்கிறது.

365 நாட்களுக்கு 24 ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.1498ல் இருந்து ரூ.1799 ஆக அதிகரிக்கிறது. 365 நாட்களுக்கு தினமும் 2ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.2498ல் இருந்து ரூ.2999 ஆக உயர்கிறது.