சென்னையை பந்தாடிய மிக்ஜாம் புயல் - ஏர்டெல், ஜியோ நெட்வொர்க் சேவைகள் பாதிப்பு!
குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது. இதில் சென்னை, திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் கன மழை அதிக அளவில் உள்ளது. பொது இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது.
நேற்று நள்ளிரவு முதல் மழை குறைந்ததை அடுத்து பல்வேறு குடியிறுப்பு பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியில் சென்று அன்றாட தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது.இதனால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
நெட்வொர்க சேவை பாதிப்பு
இந்த நிலையில் மழை நீர் சூழ்ந்த இடங்களில் சிக்கிய மக்களை மீட்க பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் உதவினர்.
இதனிடையே மக்கள் நெட்வோர்க் சேவைகள் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏர்டெல், ஜியோ போன்ற தொலைத் தொடர்பு சேவைகள் கிடைக்காமல் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் கூகுள் பே மூலம் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் கடும் அவதியடைந்ததால் மக்கள் கலக்கம் அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட நெட்வொர்க் சேவைகளை தொலை தொடர்பு நிறுவனங்கள் சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.