ட்விட்டரில் ட்ரெண்டாகும் #AirtelDown , காரணம் என்ன?

airteldown airtelbroadband
By Irumporai Feb 11, 2022 09:18 AM GMT
Report

பிரபல  அலைபேசி நிறுவனமான ஏர்டெல் நெட்வொர்க் சேவை பல இடங்களில் முடங்கியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்திடம் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஏர்டெல் பயனர்கள் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் சேவையில் சிக்கல்களை எதிர்கொள்வதாக கூறுகிறார்கள். இது குறித்து ட்விட்டரிலும் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.  

இந்த நிலையில், ஏர்டெல் பயனர்கள் இணையத்தை இயக்குவதில் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏர்டெல் நெட்வொர்க் செயலிழப்பால் இந்த பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

ஆனால் ஊடக அறிக்கைகளின்படி, இந்த பிரச்சனை நாடு முழுவதும் உள்ளது. இது ஏர்டெல் மொபைல் இணைய பயனர்கள் மற்றும் நிறுவனத்தின் பிராட்பேண்ட் மற்றும் வைஃபை சேவை பயனர்களையும் பாதித்துள்ளது.

தற்போது ஏர்டெல் இணைய சேவை பாதித்துள்ளதால் , டுவிட்டரில் #AirtelDown எனும் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆக தொடங்கிவிட்டது

இந்த நிலையில்  ஏர்டெல் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட சிக்கல் பிராட்பேண்ட் மற்றும் செல்லுலர் பயன்பாடு பாதித்ததாக கூறியுள்ளது.

இணையச் சேவைகளில் சிறிது தடங்கல் ஏற்பட்டது, இதனால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்க எங்கள் குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதால், இப்போது இயல்பு நிலை திரும்பிவிட்டதாக ஏர்டெல் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.