மியான்மரில் வான்வழித் தாக்குதல் - 5 பேர் சம்பவ இடத்தில் பலி - பதற வைக்கும் வீடியோ வைரல்...!

Viral Video Myanmar
By Nandhini Jan 15, 2023 10:00 AM GMT
Report

மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

மியான்மரில் வான்வழித் தாக்குதல்

கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மியான்மரில் அந்நாட்டு ராணுவம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

இதனையடுத்து, மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்களை ராணுவம் இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகிறது. இதுவரை ராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூட்டில் 1,500-க்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மியான்மாரில் கரேன் பழங்குடியின மக்கள் வசிக்கும் 2 கிராமங்களில் திடீரென்று ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். அக்கிராமத்தில் இருந்த 2 தேவாலயங்கள் மீது போர் விமானங்கள் குண்டுகளை வீசியது.

இத்தாக்குதலில், 2 வயது பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் இத்தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

airstrikes-in-myanmar-viral-video