Tuesday, Apr 8, 2025

ஏமன் விமான நிலையத்தில் திடீர்வெடிகுண்டு தாக்குதல் - 5 பேர் பலி

oman airport bomb
By Jon 4 years ago
Report

ஏமன் நாட்டில் விமானம் தரையிறங்கும் போது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏமன் நாட்டில் இருக்கும் ஏடன் என்ற விமான நிலையத்தில் பயங்கரமான வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் நாட்டில் அமைச்சர்களை ஏற்றிக் கொண்டு விமானம் ஏடனில் தரையிறங்கியது.

அப்போது விமானத்தில் இருந்து இறங்கி கொண்டிருந்தபோது திடீரென்று வெடிகுண்டு மற்றும் துப்பாக்கியால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

பிரதமர் அப்துல்மாலிக் ஏமனின் சவுதி தூதர் முகமது அல் ஜாபர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரையும் பத்திரமாக நகரின் ஜனாதிபதி மாளிகைக்கு பாதுகாப்பாகமாற்றியுள்ளனர்.  

மேலும் இந்த பயங்கர தாக்குதலுக்கு காரணம் தற்போது வரை காரணம் தெரியவில்லை.விமானத்தின் மீது குண்டுவீசப்பட்டிருந்தால் கொடூர விபத்து ஏற்பட்டிருக்கும் என ஏடனின் சுகாதார அலுவலகத்தின் துணைத் தலைவர் முகமது அல்-ரூபிட்,தெரிவித்துள்ளார்.

சம்பவம் உலக அரங்கில் அதிர்ச்சியினையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.