இந்தியாவுக்குள் நுழைய ஐ.எஸ் பயங்கரவாதிகள் முயற்சி - விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை
Airport
Alert
Attack
By Thahir
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியாவிற்குள் ஐ.எஸ் தீவிரவாதிகள் நுழைய முயற்சிப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்த 25 நபர்கள் பட்டியல் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுநாள்வரை ஆப்கானிஸ்தானிலிருந்த இவர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைய முயற்சிப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதனால் இந்தியாவின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.