முதல்வர் பயணித்த விமானத்தில் விடாமல் அழுத குழந்தை தாயுடன் இறக்கிவிடப்பட்டது

india delhi tamilnadu
By Jon Jan 19, 2021 05:05 PM GMT
Report

சென்னையிலிருந்து நேற்று மதியம் விஸ்தாரா விமானம் டெல்லிக்கு புறப்படவிருந்தது. அப்போது விமானத்துக்குள்ளிருந்த 4 மாத குழந்தை விடாமல் அழுததாக தெரிகிறது. குழந்தையை எவ்வளவோ சமாதானப்படுத்தியும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனால் அருகிலிருந்த பயணிகள் அவதிக்குள்ளாவார்கள் எனக் கருதி குழந்தையும் அதன் தாயும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர். குழந்தையின் தந்தை மட்டும் அதே விமானத்தில் டெல்லி சென்றார்.

சென்னையிலிருந்து நேற்று மதியம் விஸ்தாரா விமானம் டெல்லிக்கு புறப்படவிருந்தது. அப்போது விமானத்துக்குள்ளிருந்த 4 மாத குழந்தை விடாமல் அழுததாக தெரிகிறது. குழந்தையை எவ்வளவோ சமாதானப்படுத்தியும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனால் அருகிலிருந்த பயணிகள் அவதிக்குள்ளாவார்கள் எனக் கருதி குழந்தையும் அதன் தாயும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர். குழந்தையின் தந்தை மட்டும் அதே விமானத்தில் டெல்லி சென்றார். குழந்தை சில காரணங்களால் தொடர்ந்து அழுது கொண்டிருந்தது.

அதன் காரணமாக நாங்கள் அவர்களை இறக்கிவிட விரும்பவில்லை. குழந்தை உடல்நலக் குறைவால் தொடர்ந்து அழுததால் நாங்கள் அவர்களை இறக்கி விடும் முடிவை பரிசீலித்தோம். ஆனால் ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் விதிமுறைகள் மாறும். சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் மேலாளர் கூறும்போது, “ குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால், பயணி தானாக முன்வந்து, விமானத்தை விட்டு இறங்கினார்.

நாங்கள் அவர்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.” என்றார். நேற்று பகல் 2 நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்துத்து பேச உள்ளார்.