நடுவானில் பறக்கும் போது தீப்பற்றிய விமானம் : போயிங் 777 ரக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

egypt united states
By Jon Feb 26, 2021 08:58 AM GMT
Report

அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகளில் போயிங் 777 ரக விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது எகிப்திலும் போயிங் 777 ரக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

டெனவன் நகரில் இருந்து ஹொனோலோவுக்கு 231 பயணிகளுடன் சென்ற போயிங் 777 ரக விமானம் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக பறந்து கொண்டிருந்த போது நடுவானில் தீப்பிடித்து எரிந்து தீ விபத்துக்குள்ளானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. என்ஜின் பாகங்கள் ஒவ்வொன்றாக உடைந்து விழுந்தன.

இந்நிலையில் விமானிகள் சாமர்த்தியமான முறையில் அணுகுமுறையால் டெனவர் விமான நிலையத்துக்கு விமானம் திருப்பப்பட்டு பயணிகளின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இன்றி பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, போயிங் 777 விமானங்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

அதனையடுத்து, அமெரிக்காவில் உள்ள அனைத்து போயிங் 777 விமானங்களின் சேவையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பான், தென்கொரியா நாடுகளும் போயிங் 777 சேவையை தற்போது நிறுத்தியுள்ளன. இந்நிலையில் எகிப்திலும் தற்போது தனது 4 போயிங் 777 ரக விமான சேவையை நிறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பிராட் மற்றும் விட்னி பி.டபுள்யூ 4000 சீரீஸ் என்ஜின்களுடன் கூடிய போயிங் 777 ரக விமான சேவையை நிறுத்தி வைக்குமாறு போயிங் நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது.