விமான ஓடுபாதையில் மயங்கி விழுந்து ஒருவர் மரணம்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை விமான நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஏர் இந்தியா ஊழியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் பசுபதி ராஜன்(வயது 57), ஏர் இந்தியா அலுவலகத்தில் கமர்சியல் பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று நண்பகல் 2 மணியிலிருந்து இரவு 10 மணிவரை இவரது பணிநேரமாகும், இந்நிலையில் நேற்றிரவு சிக்காகோவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பார்சல்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து அங்கிருந்த சக ஊழியா்கள் அவரை உடனடியாக விமானநிலையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பசுபதி ராஜனுக்கு திவீர சிகிச்சையளிக்கப்பட்ட போதும், நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தாா்.
கடுமையான மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா். இதையடுத்து சென்னை விமானநிலைய போலீசாா் பசுபதி ராஜன் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதணைக்கு அனுப்பி, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.