ரூ.5 லட்சம் கொடுத்து விமான டிக்கெட்.. இப்படி பண்ணிட்டாங்க - கதறிய CEO
தனியார் நிறுவன CEO ஒருவர் ஏர் இந்தியா விமானத்தின் சேவையை விமர்சித்துள்ளார்.
ஏர் இந்தியா
அமெரிக்கா, சிகாகோ நகரிலிருந்து டெல்லிக்கு வர, முதல் வகுப்பில் ஏர் இந்தியா விமானத்தில் படேல் எனும், தனியார் நிறுவன சிஇஓ டிக்கெட் புக் செய்துள்ளார்.
மொத்தம் 12 ஆயிரம் கி.மீ தொலைவில், 15 மணி நேர டிராவலிற்கு ரூ.5.19 லட்சம் டிக்கெட்டாக பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து பயண நாளில், விமானத்தின் முதல் வகுப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த கேபின் மிகவும் பழுதடைந்துள்ளது.
பயணி விமர்சனம்
சீட்டில் தலை முடியும், குப்பைகளும் சிதறி கிடந்துள்ளன. ஹெட்போன்கள் உடைந்து போயுள்ளன. இதனை அவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வழக்கமாக ஏர் இந்தியா சேவையில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும்.
ஆனால், இந்த அளவுக்கு மோசமான சேவையை தான் எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக வழங்கப்படும் உணவுகளில் 30% உணவுகள் வழங்கப்படவில்லை.
சமோசாவும், சூப்பும் ஓரளவுக்கு நன்றாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.