நடுவானில் ரொமான்ஸ்; விமானம் தானியங்கி நிலையில்.. ஏர் ஹோஸ்டஸ் தகவல்!
விமான பணிப்பெண் பல தகவலை பகிர்ந்துள்ளார்.
நடுவானில் இதுதான் நடக்கும்..
சியரா மிஸ்ட் என்று அழைக்கப்படும் விமான பணிப்பெண் சோசியல் மீடியாவில் நடுவானில் விமானம் பறக்கும்போது பயணிகளுக்கு தெரியாமல் திரைக்கு பின்னால் நடக்கும் சம்பவங்களை பகிர்ந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
விமானத்தை தானியக்க பைலட் நிலைக்கு கொண்டுவரப்பட்ட பின் சில விமானிகளுகம் விமான பணி பெண்களும் அன்பை பகிர்ந்து கொள்வார்கள். இந்த நிகழ்வகள் அரிதானவை அல்ல. நீண்ட தூர விமாங்களில் இதுப்போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கமாக உள்ளது.
இவை ஏற்கனவே அவர்களுக்குள் திட்டமிட்டாக ஒன்றாக தான் இருக்கும். விமான போக்குவரத்தின் நெறிமுறைகளின் படி, ஒரு விமானி ஒரு விமானப் பணிப்பெண்ணை விமானி அறைக்குள் அழைக்க அனுமதி உள்ளது.
பணிப்பெண் தகவல்
அதாவது கழிப்பறை இடைவேளை, தேநீர் அல்லது குடிப்பதற்கு ஏதாவது தேவை என்ற போர்வையில் தனிப்பட்ட தருணங்களைத் தொடங்க அவர்கள் விதிகளை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தப்படலாம்.
நீண்ட தூர விமானங்களின் போது கேபின் குழுவினர் ஓய்வெடுக்க ஒதுக்கப்பட்ட பகுதியான பணியாளர் ஓய்வு தளத்தை சில விமான பணியாளர்கள் மற்றும் விமானிகள் இதுபோன்ற காதல் தொடர்புகள் நிகழக்கூடிய மற்றொரு இடமாக மாறுகிறது.
விமானப் போக்குவரத்து வட்டாரங்களில் அறியப்பட்ட இந்த இடம், பொதுவாக விமானப் பயணிகளுக்குத் தெரியாது, மேலும் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே இந்த இடங்களில் அனுமதி வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.