எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும்; விமானப்படை வீரர்களுக்கு அதிரடி உத்தரவு!
நாட்டின் எல்லைப் பிரச்னையை தீர்க்கப் படாமல் இருப்பதால் விமானப்படை வீரர்கள் எந்த நேரத்திலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என தென் மண்டல தலைமை தளபதி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் பயணமாக இந்திய விமானப்படை தென்மண்டல தளபதி மன்வேந்தர சிங் தஞ்சாவூருக்கு நேற்று வந்தார். விமானப்படை வீரர்கள் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
பின்னர் வீரர்கள் மத்தியில் பேசிய தென்மண்டல தளபதி, ஆக்சிஜன் கொள்கலன்களை விநியோகம் செய்ய விமானப்படை வீரர்கள் மேற்கொண்ட பணி பாராட்டத்தக்கது.
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி கொரோனா பணியை சிறப்பாக செய்து வருவது பாராட்டுக்குரியது என்றார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய எல்லையில் பிரச்சனை தீரவில்லை.
எனவே வீரர்கள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இந்திய
விமானப் படையும் அமெரிக்க கடற்படையும் இணைந்து மேற்கொண்ட பன்னாட்டு கூட்டு பயிற்சியில் தஞ்சாவூர் வீரர்கள் முன்னிலை வகித்ததை பாராட்டுகிறேன் என்று
கூறினார்.