சென்னையில் வெடித்து சிதறிய விமானம்; குதித்த விமானிகள்? பரபரப்பு பின்னணி!
சென்னையில் விமானம் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான விபத்து
தாம்பரம் விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம், இன்று செங்கல்பட்டு, திருப்போரூர் அருகே வானில் பறந்துள்ளது.

அப்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எதிர்பாராதவிதமாக பயிற்சி விமானம் வெடித்துச் சிதறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய பயிற்சி விமானத்தில் இருந்த 2 விமானிகளும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் விபத்தில் சிக்கியது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் இன்று காலை சிறிய ரக விமானம் ஒன்று திடீரென சாலையில் தரையிறங்கியது.
என்ன நடந்தது?
விமானம் தரையிறங்கும் போது, அந்த வழியில் வாகனங்கள் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்தது. விமானத்தில் இருந்த பயிற்சி விமானி உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்.

விமானத்தில் இருந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானப்படை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இந்த அவசரத் தரையிறக்கம் நடந்ததாக தெரியவந்துள்ளது.