எல்லை பகுதியில் கிடந்த விமான பலூன் - உளவு பார்க்க அனுப்பப்பட்டதா?
காஷ்மீர் சர்வதேச எல்லை பகுதியில் கிடந்த விமான வடிவிலான பலூன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான பலூன்
ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லையில் ராரா எனும் கிராமம் உள்ளது. இங்கு உள்ள கோவில் அருகே பலூன் ஒன்று கிடந்தது. அந்த பலூன் விமானத்தின் வடிவில் இருந்தது. பலூனில் பிஎச்என் மற்றும் எமிரேட்ஸ் என எழுதப்பட்டு இருந்தது.

இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து அதனை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பலூன் கைப்பற்றப்பட்ட ராரா கிராமம் என்பது சர்வதேச எல்லையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது.
உளவு
தொடர்ந்து, அது உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் சீனாவில் உளவு பலூன் பறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியான மொன்டானாவில் உள்ள விமான படை தளத்தின் மீது பறந்து ராணுவ விவகாரங்களை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது.