ரூ.40 ஆயிரம் கோடி சொத்து - உதறிவிட்டு துறவியான ஏர்செல் உரிமையாளரின் வாரிசு!
ஏர்செல் நிறுவன ஓனரின் சொத்துகள் வேண்டாம் என விலகி துறவியாகியுள்ளார்.
ஏர்செல் நிறுவனம்
ஏர்செல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த கிருஷ்ணா. இவரின் நிகர சொத்து கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 40,000 கோடி. czar என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது ஒரே மகன் வென் ஆஜன் சிரிபான்யோ.
டெலிகாம் மட்டுமல்லாமல் மீடியா, எண்ணெய், கேஸ், ரியல் எஸ்டேட் மற்றும் சாட்டிலைட் உள்ளிட்ட நிறுவனங்களும் இவர்களுக்கு சொந்தமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட ஒன்பது பெருநிறுவனங்களில் கிருஷ்ணன் முதலீடு செய்துள்ளார்.
ஆஜன் சிரிபான்யோ
இதன் மூலம், மலேசியாவின் பணக்கார நபர்களில் ஒருவராகியுள்ளார். இவர் புத்த மதத்தைச் சேர்ந்தவர். இவருக்கு அடுத்து இவரது மகன் சிரிபான்யோ இவரது சாம்ராஜ்யத்தை தொடர்ந்து நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தனது 18 வயதிலேயே புத்த மத துறவியானார்.
சிறிது காலத்திற்கு துறவரம் மேற்கொண்டு பார்க்கலாமே என்றுதான் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவர் துறவற வாழ்க்கையை தேர்வு செய்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. வனத்தில் துறவியாக வாழ்ந்து வரும் இவர், தாய்லாந்தில் உள்ள தட்டோ தம் மெனாஸ்ட்ராயில் தலைமை துறவியாகவும் உள்ளார்.