WIFI வடிவில் இருந்த ரகசிய கேமரா ... சிக்கிய ஹோட்டலுக்கு வந்த ஜோடிகளின் அந்தரங்க வீடியோக்கள்
அமெரிக்காவில் தங்கும் விடுதி ஒன்றின் உரிமையாளர் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் ஜேய் அல்லீ என்பவருக்கு சொந்தமான ஏர்பிஎன்பி என்ற பிரபல தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இவரது விடுதிக்கு சமீபத்தில் வந்த தம்பதியினர் முன்னெச்சரிக்கையாக அறைக்குள் ரகசிய கேமரா இருக்கிறதா என்பதை சோதனை செய்துள்ளனர்.
ரகசிய கேமராவை எப்படி கண்டுபிடிப்பது என இணையத்தில் தேடி அதன்மூலம் அந்த அறையை ஆராய்ந்தபோது வைஃபை கருவி வடிவில் அதில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இதுபற்றி தம்பதியினர் போலீசாருக்கு புகார் தெரிவிக்க களத்தில் இறங்கி விசாரித்தவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.
முதலில் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என மறுத்த ஜேய் அல்லீ பிறகு ஆதாரத்துடன் நிரூபித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். இதுவரை அந்த விடுதியில் தங்கியிருந்த 2000 நபர்களின் அரை நிர்வாண படங்கள் மற்றும் உடலுறவு மேற்கொள்ளும் வீடியோக்களையும் ஜெய் அல்லீ பதிவு செய்துள்ளதாக தெரிவித்த நிலையில் அவரது மொபைல் போன், லேப்டாப் மற்றும் டேப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.