இந்தியாவில் அதிகரித்த காற்று மாசு? - விஷத்தை சுவாசிக்கும் மக்கள்
மாசு அடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் 65 இடங்களை பிடித்துள்ளது என்று ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவில் காற்று மாசு
உலக நாடுகளில் மாசு தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐக்யூ ஏர் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள மாசு தரவரிசை பட்டியலில், உலகம் முழுவதும் 131 நாடுகளில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 100 மாசுப்பட்ட நகரங்களில் இந்தியாவின் 65 நகரங்கள் உள்ளதாக ஐக்யூ ஆர் நிறுவனம் அறிவித்துள்ளது.
65 இடங்களுக்கு அடுத்து தலைநகர் டெல்லி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற நிலை நீடித்தால் மாசு உள்ள இடங்களில் பொதுமக்கள் வாழ்வதற்கே தகுதியற்ற இடமாக மாறிவிடும் என்ற தகவல்கள் கூறுகின்றன.