உள்ளாடைக்குள் ரூ.25 லட்சம் பதுக்கிய பெண் விமானப் பயணி
டெல்லி விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 32, 300 அமெரிக்க டாலர் நோட்டுகளை மறைத்து கடத்தி எடுத்துச் செல்ல முயன்ற பெண்ணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிக்கிய 50 வயது பெண்
டெல்லி விமான நிலையத்தில் மத்திய பிரதேசம் இண்டூரில் இருந்து இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் சர்க்கர நாற்காலியில் அமர்ந்து பயணித்து வந்த 50 வயது பெண் பயணி அதே நிறுவனத்தின் இணைப்பு விமானத்தில் துபாய் செல்ல தயாராக இருந்தார்.

அவரை டெல்லியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பெண் உள்ளாடைக்குள் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 32,300 அமெரிக்க டாலர் நோட்டுகளை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விமானத்தில் இருந்து அந்த பெண்ணை இறக்கிய மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.