விமான நிறுவன ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் - நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

Flight Air India
By Sumathi May 08, 2024 10:14 AM GMT
Report

 விமான நிறுவன ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏர் இந்தியா 

ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

air india

அதன்படி, இன்று அதிகாலை முதல் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்தியதால் ஏர் இந்தியா விமான சேவைகள் திடீரென முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன.

நடுவானில் பறந்த கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் - கொட்டிய தேள் அலறிய பெண் பயணி

நடுவானில் பறந்த கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் - கொட்டிய தேள் அலறிய பெண் பயணி

 ஊழியர்கள் போராட்டம்

இதனால் நாடு முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் உட்பட நாடு முழுவதும் சுமார் 70 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு - டெல்லி, கோழிக்கோடு - துபாய், குவைத் - தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி,

விமான நிறுவன ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் - நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! | Air India Flights Canceled Due To Employees Strike

கண்ணூரில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கண்ணூரில் இருந்து மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கொச்சி விமான நிலையத்திலிருந்து நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, பயணிக்களுக்கான மாற்று ஏற்பாடுகளை விரைவாக செய்து தர வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.